Home இந்தியா உலகத் தலைவர்களுக்கு மோடி நன்றி – ஒபாமா பெயர் புறக்கணிப்பு

உலகத் தலைவர்களுக்கு மோடி நன்றி – ஒபாமா பெயர் புறக்கணிப்பு

571
0
SHARE
Ad

narendra-modi-obamaபுதுடில்லி, மே 20 – நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்கவுள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா தொலைபேசி மூலம் தனது வாழ்த்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு நரேந்திர மோடி டுவிட்டர் இனையத்தளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் நேற்று மோடி வெளியிட்டுள்ள பதிவில் ஜப்பான், ரஷ்யா,ஸ்பெயின், நேபாளம், கனடா, ஜெர்மன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ முன் மற்றும் திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கோ அல்லது டுவிட்டர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கோ, மோடி நன்றி தெரிவிக்கவில்லை.

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு ஒபாமா வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் ஜான் கெர்ரி டுவிட்டர் இணையதளம் மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.