Home நாடு MH370 விமானப் பணியாளரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

MH370 விமானப் பணியாளரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

620
0
SHARE
Ad

MH370புத்ரா ஜெயா, மே 20 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் பணியாளர்களுள் ஒருவரான முகமட் ஹஸ்ரின் ஹஸ்னான் என்பவரின் மனைவியான இண்டான் மைஸூரா ஓத்மானுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

புத்ராஜெயா மருத்துவமனையில் நேற்று மாலை 4 மணியளவில் பிறந்த அக்குழந்தை, முகமட் ஹஸ்ரின் மற்றும் இண்டான் மைஸூரா தம்பதிகளின் இரண்டாவது குழந்தை ஆகும்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 12.41 மணியளவில் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட MH370 விமானம் 1 மணி நேரத்திற்குப் பிறகு தாய்லாந்து கடல் எல்லையை தொட்டவுடன் ரேடார் தொடர்பில் இருந்து காணாமல் போனது.

#TamilSchoolmychoice

கடந்த 73 நாட்களாக மேற்கொண்ட அனைத்துலக தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.