Home இந்தியா பிரேமலதா விஜய்காந்தை மனம் திறந்து பாராட்டிய மோடி!

பிரேமலதா விஜய்காந்தை மனம் திறந்து பாராட்டிய மோடி!

612
0
SHARE
Ad

Vijayakanth-Modiபுதுடெல்லி, மே 21 – புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

அவ்வகையில், தமிழகத்தில் அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனரும் அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

vijaykanthiஅப்போது, இந்த மகத்தான வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கும், நாடாளுமன்ற குழு தலைவராக தன்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசிய நரேந்திர மோடி, எல்.கே.சுதீஷின் அருகில் அமர்ந்திருந்த பிரேமலதா விஜயகாந்தை சுட்டிக்காட்டி,

#TamilSchoolmychoice

‘அடக் கடவுளே.., அவர் எவ்வளவு வேலை செய்தார் தெரியுமா?’ என்று வியப்புடன் குறிப்பிட்டார். இதேபோல், விஜயகாந்தையும் கட்டித்தழுவியபடி, அவர் அளித்த ஒத்துழைப்புக்கு மோடி நன்றி தெரிவித்தார்.