Home உலகம் அமெரிக்காவில் இந்திய விசாக்களை மேற்பார்வையிட 6 புதிய விசா சேவை மையங்கள்!

அமெரிக்காவில் இந்திய விசாக்களை மேற்பார்வையிட 6 புதிய விசா சேவை மையங்கள்!

459
0
SHARE
Ad

americans-get-a-10-yrs-biz-visa-chinese-for-6-mthsவாஷிங்டன், மே 21 – அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் இயங்கிவரும் இந்தியத் தூதரகம் இந்த மாத ஆரம்பத்தில் இந்திய விசா மற்றும் அதன் தொடர்பான சேவைப் பணிகளை மேற்பார்வையிட காக்ஸ் & கிங்ஸ் குளோபல் (Cox & Kings Global Services) நிறுவனத்தை நியமித்துள்ளதாகத் தெரிவித்தது. கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தப் பணிக்கென இந்தியத் தூதரகம் நியமித்துள்ள மூன்றாவது நிறுவனம் இதுவாகும்.

தற்போது இந்நிறுவனம், வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் சான்பிரான்சிஸ்கோ ஆகிய ஆறு நகரங்களில் தங்களுடைய சேவை மையங்களைத் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை முதல் செயல்படவிருக்கும் இந்த மையங்கள் இந்திய விசா அவசியங்கள், இந்திய வெளிநாட்டு குடிமக்கள், இந்திய வம்சாவளியினர், அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்தியாவிற்கு வருகை தர விரும்புவோரின் தேவைகள் போன்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் என்று காக்ஸ் & கிங்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுலா, வணிகம், மாநாடு, கல்வி மற்றும் பிற தேவைகளுக்கான விசா பணிகளும் இந்த மையங்களில் மேற்பார்வையிடப்படும். இது தவிர அமெரிக்காவில் வாழும் பிற நாட்டவர்களின் விண்ணப்பங்களையும் இந்த மையங்கள் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது பற்றி காக்ஸ் & கிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் பாதுரி கூறுகையில், “இந்தியத் தூதரகத்துடன் இனைந்து விசா பணிகளை மேற்கொள்வதில், எங்கள் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. எங்கள் சேவைகளின் மூலம் மக்கள், தங்களின் விசா தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.