எனினும், தற்போது அங்கு அறிமுகமாகியுள்ள அனைத்து நவீன திறன்பேசிகளும் 4ஜிவலையமைப்பினை பயன்படுத்தி வருகின்றது. மேலும், இந்த 4ஜி வலையமைப்புகளுக்கான வழித் தடங்கல் பரவலான இடங்களில் இடம்பெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து, EE நிறுவனம் 3ஜி, 4ஜி வலையமைப்புக்களை விடவும் 1000 முதல் 5000 மடங்கு வேகம் கொண்டதாக இருக்கக் கூடிய 5ஜி வலையமைப்பினை உருவாக்கிவருகின்றது.
இதன் தரவு பரிமாற்ற வேகம் அதிகபட்சமாக 100 Gbps வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
வலையமைப்பிற்கான ஐந்தாம் தலைமுறை உருவாக்கம் பற்றி அந்நிறுவனத்தின் அதிகாரி ஆண்டி சட்டான் கூறுகையில், “அதிவேகமான தரவு பரிமாற்றத் திறன் கொண்ட 5ஜி அமைப்பின் மூலம் அனைத்து வகையான செயலிகளையும் இயக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
இந்த புதிய திட்டம் எதிர் வரும் 2022-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.