Home இந்தியா பிரதமராக போகும் மோடிக்கு, சோனியா காந்தி வாழ்த்து!

பிரதமராக போகும் மோடிக்கு, சோனியா காந்தி வாழ்த்து!

548
0
SHARE
Ad

Modi1டெல்லி, மே 23 – நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று  பிரதமராக போகும் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சிகளான பாஜக,காங்கிரஸ் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றை ஒன்று தாக்கி மிகவும் கடுமயாக விமர்சித்தனர்.

தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள மக்களின் அதிர்ப்தி தெரிந்தது. இந்நிலையில் பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

 

Comments