Home உலகம் செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு – ஐநா அதிர்ச்சி! 

செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு – ஐநா அதிர்ச்சி! 

493
0
SHARE
Ad

_74977911_74977910ஜெனிவா, மே 24 – உலகில் செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.

போதையை ஏற்படுத்தும் புதிய புதிய ரசாயன கலவைகள், முன்பு எப்பொழுதும் இல்லாத வேகத்தில் உருவாக்கப்பட்டு வருவதை ஐ.நா வின் போதை மருந்து குற்ற ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

2013-ம் ஆண்டில் புதிதாக அடையாளம் காணப்பட்ட செயற்கை போதை வஸ்துக்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகமாக இருகின்றது. தவிர இந்த போதைப் பொருள் எதற்குமே சர்வதேச போக்குவரத்து கட்டுப்பாடு கிடையாது என்ற நிலையும் இருந்து வருகிறது என ஐ.நா அதிர்ச்சி அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

‘மெத்தம்ஃபெட்டமைன்'(Methamphetamine) என்ற அதி போதை தரும் மருந்தினை செல்வச் செழிப்புமிக்க இளைஞர்கள் அதிகமாகவுள்ள வட அமெரிக்காவிலும், கிழக்கு தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகரித்து வருவதாக ஐநா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்த போதை மருந்தின் உற்பத்தி மையங்களாக மேற்கு ஆப்பிரிக்கா, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளதாகக் கருதப்படுகின்றது.

வழக்கமாக பயன்படுத்தும் போதை மருந்துகளான ஹெராயின், கோகைன் போன்றவைகளை விட இந்த செயற்கை போதைப் பொருட்கள் அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும், இந்த கலவையான ரசாயனங்களால் உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று கூறப்படுகின்றது.