புதுடில்லி, மே 24 – பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அதிரடியாக சார்க் எனப்படும் தென் ஆசிய அண்டை நாடுகளின் தலைவர்களை தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆறு நாடுகளின் தலைவர்கள் தங்களின் வருகையை உறுதிப்படுத்தியிருந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மட்டும் இதுவரை தனது வருகையை உறுதிப்படுத்தாமல் இருந்தார்.
இன்று நவாஸ் ஷெரிப் தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் நவாஸ் ஷெரிப்புடன் மோடி தனிப்பட்ட முறையில் ராஜதந்திர பேச்சு வார்த்தைகளையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் ஷெரிப்பின் வருகையை பாகிஸ்தான் இராணுவம் எதிர்க்கின்றது – தடை செய்துள்ளது என்ற செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.