Home தொழில் நுட்பம் விரைவில் ஆண்டிராய்டு கருவிகளில் “1பாஸ்வேர்ட்” மென்பொருள்!  

விரைவில் ஆண்டிராய்டு கருவிகளில் “1பாஸ்வேர்ட்” மென்பொருள்!  

517
0
SHARE
Ad

passமே 26 – செல்பேசிகளில் தகவல் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மேலாண்மை (Password Management) மென்பொருளான ‘1பாஸ்வேர்ட்’ (1Password) விரைவில் அனைத்து ஆண்டிராய்டு கருவிகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கடவுச்சொற்கள் மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் இந்த மென்பொருள் மூலமாக பயனர்கள், தங்கள் ரகசியத் தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பாதுகாக்க இயலும்.

தற்போது வரை இந்த மென்பொருளானது ஐஒஎஸ் மற்றும் மேக்  சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இதற்கான தொடர்புகள் இருந்தாலும் பயனர்களால் இதனை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இந்நிலையில், எதிர்வரும் ஜுன் மாதம் 10-ம் தேதி இந்த செயலியானது கூகுள் ப்ளே ஸ்டாரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

பயனர்கள் இந்த  ‘1பாஸ்வேர்ட்’ (1Password) மென்பொருளை கூகுள் பிளே ஸ்டோரில்  இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். எனினும், இதன் சோதனைப் பதிப்பை ஆகஸட் மாதம் 1-ம் தேதி வரை மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும். அதன் பின்னர், பயனர்களின் தேவைகளுக்கு தகுந்தார் போல், கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.