Home தொழில் நுட்பம் வந்துவிட்டது கூகுளின், அண்ட்ரோய்ட் கைக்கடிகாரம்!

வந்துவிட்டது கூகுளின், அண்ட்ரோய்ட் கைக்கடிகாரம்!

556
0
SHARE
Ad

#TamilSchoolmychoice

Android watch 440 x 215மார்ச் 20 – தொழில் நுட்பச் சந்தையில் பல புதுமைகளைப் புகுத்தி வரும் கூகுள், தனது மற்றுமொரு புதுமைப் படைப்பாக ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றது.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின், அண்ட்ரோய்ட்  பிரிவின் மூத்த துணைத் தலைவர் சுந்தர் பிச்சை தனது அறிக்கையில் கூறியதாவது, ” கூகுள், அண்ட்ரோய்ட் இயங்கு தளம் கொண்ட அணிகலன்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதன் தொடக்கமாக அண்ட்ரோய்ட்  கைக்கடிகாரம்அமையும்எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்இந்த அண்ட்ரோய்ட் கைக்கடிகாரம், திறன் பேசிகள் போன்று பல சிறப்பு அம்சங்களைக்  கொண்டுள்ளது. அதில் குறிப்பாக, கைக்கடிகாரத்தின் திரையைப் பார்த்து “OK Google” என்று கூறுவதன் மூலம்விமான சேவைகளின் விவரங்களைப் பெறுதல், விமானக் கட்டண முன் பதிவு செய்தல், அருகாமையில்இருக்கும் உணவகங்களை அறிதல் போன்ற பல தகவல்களைப் பெறமுடியும்என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கைத்தொலைபேசிகளுடன் பேசிக் கொண்டே திரியும் மனிதர்கள் இனி தங்களின் கைக்கடிகாரத்துடன் பேசிக் கொண்டே செல்லும் நாட்கள் வெகு தொலைவில்இல்லை!