Home உலகம் கிரிமியாவிலுள்ள உக்ரேனிய கடற்படைத் தளத்தில் ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆதரவாளர்கள்

கிரிமியாவிலுள்ள உக்ரேனிய கடற்படைத் தளத்தில் ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆதரவாளர்கள்

597
0
SHARE
Ad

Crimea map 440 x 215

மார்ச் 20 – கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள கிரிமிய துறைமுகத்தின் உக்ரேனிய கடற்படைத் தளத்தினுள் முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆர்ப்பாட்டாளர்கள் உள்ளே  நுழைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

உக்ரேனிய கடற்படையினர் அந்தக் கடற்படைத் தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாகக் கூறப்படுகின்றது.

கிரிமியாவில் ஆயுத மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அங்கு அரசு அமைச்சர்கள் இருவர் செல்வதாக உக்ரேன் கூறியதற்கு, ரஷ்ய ஆதரவு அரசாங்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிரிமியாவிலுள்ள உக்ரேன் நாட்டின் கடற்படைத் தளமும் இராணுவ முகாமும் கடந்த சில நாட்களாகவே ஆயுதம் தாங்கிய ரஷியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.