இது குறித்து கருத்துரைத்த மலேசிய தற்காப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளதாவது, “கடந்த மாதம் பிப்ரவரி 3-ந்தேதி அந்த சிமுலேட்டரில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களை மீட்க வல்லுனர்கள் குழு முயன்று வருகிறது” என்றுகூறியுள்ளார்.
மேலும் விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் தங்களது அறையில் பேசியதை மலேசிய அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும், அதில் சந்தேகப்படும்படியான எவ்வித உரையாடலும் இல்லை என்று தெரிய வந்ததுள்ளது.
நம்பகமான தகவல்களைவிட வதந்திகள்தான் அதிகமாக இருக்கிறது என்ற நிலையில் எப்படியாவது சீக்கிரம் விமானத்தை கண்டுபிடிங்க என்பதே அனைவரின் வேட்கையாகவும், வேண்டுதலாகவும் இருக்கிறது.