Home நாடு பாண்டா கரடிகளை பார்வையிட்டார் நஜிப்!

பாண்டா கரடிகளை பார்வையிட்டார் நஜிப்!

729
0
SHARE
Ad

Najib-Pandaகோலாலம்பூர், மே 26 – மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவை வலியுறுத்தி மலேசியாவிலுள்ள தேசிய மிருகக்காட்சி சாலைக்கு சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு மிகப் பெரிய பாண்டா கரடிகளான ஃபு வா மற்றும் ஃபெங் இ ஆகிய இரண்டையும் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று பார்வையிட்டார்.

அதோடு, பாண்டா கரடிகளை தான் பார்வையிடும் புகைப்படத்தையும் நஜிப் தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

வரும் மே 31 ஆம் தேதி, மலேசியா, சீனா இடையிலான நல்லுறவு 40 ஆண்டுகளை எட்டுகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக இந்த இரண்டு பெரிய வகை பாண்டாக்களும் சுமார் 10 வருடங்களுக்கு மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் தேசிய மிருகக்காட்சி சாலையில் 1 மாதத்திற்கு சிறப்பு இடமொன்றில் வைத்து பராமரிக்கப்படும் இந்த இரண்டு பாண்டாக்களும், புதிய சூழ்நிலைக்கு பழகியவுடன் வேறு இடத்திற்கு மாற்றப்படும்.

கடந்த 2012 – ம் ஆண்டு சீனாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, இந்த இரண்டு பெரிய வகை பாண்டா கரடிகளையும் மலேசியா பராமரிக்கும் வாய்ப்பைப் பெற்றது.

மலேசியாவில் இந்த பாண்டா கரடிகளை பராமரிக்கும் பொறுப்பை இந்த துறையில் சிறந்து விளங்கும் சில உள்ளூர் நிபுணர்களிடம் மலேசிய அரசாங்கம் கொடுத்துள்ளது.