Home இந்தியா புதிய அமைச்சரவை அறிவிப்பு! மோடியின் கீழ் பாதுகாப்புத்துறை!

புதிய அமைச்சரவை அறிவிப்பு! மோடியின் கீழ் பாதுகாப்புத்துறை!

560
0
SHARE
Ad

narendra-modiபுதுடில்லி, மே 26 – இந்தியாவின் 14-வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதில் பாதுகாப்புத்துறை பொறுப்பை மோடியே ஏற்றுள்ளார்.

உள்துறை அமைச்சர் பதவி ராஜ்நாத் சிங்கிற்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி சுஷ்மா சுவராஜுக்கும், நிதித்துறை அமைச்சர் பதவி அருண் ஜெட்லிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது தவிர செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் உள்ளி்ட்டோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

24 கேபினட் அமைச்சர்கள், 11 இணையமைச்சர்கள் மற்றும் 10 தனிப்பொறுப்புள்ள இணையமைச்சர்கள் என மொத்தம் 45 அமைச்சர்களுக்கு பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.