Home இந்தியா டில்லியில் வைகோ கறுப்புக்கொடி போராட்டம்!

டில்லியில் வைகோ கறுப்புக்கொடி போராட்டம்!

506
0
SHARE
Ad

vaiko-1புதுடில்லி, மே 26 – இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க,. பொதுசெயலர் வைகோ இன்று காலையில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் பேசிய வைகோ, இன்று மகிழ்ச்சிக்கும் – துக்கத்திற்கும் உரிய நாள் என்று வைகோ கூறினார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய வைகோ, இருதயத்தை ஈட்டியாக குத்தி காயப்படுத்தியிருக்கும் நாள் இன்று ஆகும். நான் மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மகிந்தா ராஜபக்சே லட்சக்கணக்கான தமிழர்களை, ஆயுதம் ஏந்தாதவர்களை, பச்சிளம் குழந்தைகளை படுகொலை செய்தவர் ராஜபக்சே. மனித கொலைகளை முன்னின்று நடத்தியவர். இன படுகொலைக்கு காரணமானவர். இவருக்கு எங்களின் எதிர்ப்புக்களை இன்று பதிவு செய்துள்ளோம்.

#TamilSchoolmychoice

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும், அது எடுக்கும் சில முடிவுகளை பொறுத்து எங்கள் முடிவுகளை உள்ளிருந்தபடி, தெரிவிப்போம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது, அதனால் தூக்கி எறியப்பட்டது. எனவே தற்போதைய தே.ஜ. கூட்டணி அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் வைகோ கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினார்.

இந்தபோராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்; சிங்கள அதிபர் ராஜபக்சே, டில்லியில் விருந்தாளியா, கொடுமையடா, கொடுமையடா, இதயம் உடைந்து நொறுங்கி போனது, ரத்த வேட்டையாடியா ராஜபக்சே டில்லியிலா ? சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும், சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.