Home நாடு மலேசிய காற்பந்து சங்கத்தின் புதிய தலைவராக துங்கு அப்துல்லா தேர்வு!

மலேசிய காற்பந்து சங்கத்தின் புதிய தலைவராக துங்கு அப்துல்லா தேர்வு!

554
0
SHARE
Ad

tengku mahkota pahangகோலாலம்பூர், மே 26 – மலேசிய காற்பந்து சங்கத்தின் புதியத் தலைவராக பகாங் மாநில இளவரசர் துங்கு அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 27-12 வாக்குகள் வித்தியாசத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற தேர்தலில் ஜொகூர் மாநில இளவரசர் துங்கு இஸ்மாயிலை தோற்கடித்தார்.

முதலில் வாக்கெடுப்பு நடந்து முடிந்த போது துங்கு அப்துல்லா 24-15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், வெற்றி பெறுபவர் 3-2 பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்பதால் மறுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது.நடத்தப்பட்ட மறுத்தேர்தலில் துங்கு அப்துல்லா 27-12 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார்.

தனது வெற்றி குறித்து பின்னர் பேசிய துங்கு அப்துல்லா, “எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் 4 வருடங்கள் கழித்து எனது தலைமைத்துவ ஆற்றலை முடிவு செய்யுங்கள். நடந்து விட்ட தவறுகளை திருத்துவதற்கு எனக்கு வாய்ப்பும் அவகாசமும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நான் அனைவரின் கோரிக்கைகளையும் கவனமாக கேட்பேன், பரிசீலிப்பேன். இன்றைக்கு தோற்றவர்கள் கூறும் கருத்துகளையும் நான் சரிசமமாக கேட்பேன். தேவைப்படும் மாற்றங்களை செய்வேன்” என்றும் அவர் கூறினார்.m_34siva

துங்கு அப்துல்லாவுக்கு முன்னதாக கடந்த 30 ஆண்டுகளாக அவரது தந்தை சுல்தான் அமாட் ஷா மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய காற்பந்து சங்கத்தின் பொறுப்பாளர்களின் தேர்தல்களில் துணைத் தலைவர்களாக கிளந்தானைச் சேர்ந்த டத்தோஸ்ரீ அப்பென்டி ஹம்சாவும் சிலாங்கூரைச் சேர்ந்த டத்தோ அப்துல் மொக்தாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாக ஆட்சிக் குழு உறுப்பினர்களில் டத்தோ எஸ்.சிவசுந்தரம் மட்டுமே ஒரே இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த நிர்வாகத்திலும் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.