Home கலை உலகம் 67-வது கேன்ஸ் திரைப்பட விழா: சிறந்த படமாக ‘விண்டர் ஸ்லீப்’ தேர்வு!

67-வது கேன்ஸ் திரைப்பட விழா: சிறந்த படமாக ‘விண்டர் ஸ்லீப்’ தேர்வு!

654
0
SHARE
Ad

winter-sleep-cannes-2014-3கேன்ஸ் (பிரான்ஸ்), மே 26 – பிரான்ஸில் நடைபெற்று முடிந்த சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் இவ்வருடம், ‘பாம் டிஓர்’ விருதை (Palme d’Or) துருக்கியின் நூரி பில்ஜ் செய்லான் இயக்கிய ‘விண்டர் ஸ்லீப்’ எனும் திரைப்படம் வென்றுள்ளது.

இந்த விருதுக்காக இம்முறை ‘விண்டர் ஸ்லீப்’ உடன் 17 படங்கள் போட்டியிட்டன. கடந்த 1982-ம் ஆண்டிற்குப் பிறகு துருக்கிய திரைப்படம் வெல்லும் மிகப் பெரிய விருது இதுவாகும்.

சுமார் 3 மணி நேரங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த விருதை ‘விண்டர் ஸ்லீப்’ வெல்வதன் மூலம் துருக்கிய சினிமாவிற்கு புதிய வரலாற்றுப் பெருமையை தேடித் தந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதிக சொத்துக்களைக் கொண்ட ஒரு ஓய்வு பெற்ற சினிமா நடிகர், அவரது இளம் வயது மனைவி, சமீபத்தில் விவாகரத்து செய்த அவரது சகோதரி ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்குள் நகர்கிறது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தை இயக்கிய செய்லான் பரிசு பெற்ற தருணத்தில், கடந்த வருடம் துருக்கியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு இவ்விருதினை சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

அவர் ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது முன்னைய நான்கு திரைப்படங்களுக்கு விருதுகள் வென்றவர் ஆவார்.  இம்முறை ‘விண்டர் ஸ்லீப்’ திரைப்படத்தை அவர் கேன்ஸ் திரைபப்ட விழாவுக்கு கொண்டுவந்த போது, அது திரையில் காட்டப்படுவதற்கு முன்னரே இத்திரைப்படம் தான் விருதை வெல்லப் போகிறது என பலர் ஆரூடங்கள் கூறத்தொடங்கிவிட்டனர்.

துருக்கிய சினிமா இந்த வருடம்  தனது நூற்றாண்டு சினிமாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.