Home கலை உலகம் ராஜபக்சே விவகாரம்: மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ரஜினி, விஜய்!

ராஜபக்சே விவகாரம்: மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ரஜினி, விஜய்!

634
0
SHARE
Ad

rajini-kanthசென்னை, மே 26 –  நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழாவில் சுப்பர் ஸ்டார் ரஜினியும், இளைய தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவில்லை.

நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அவர் சுப்பர் ஸ்டார் ரஜினியையும், விஜய்யையும் சந்தித்து ‘சினிமா’ பற்றி பேசிவிட்டு வந்தவர் மோடி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராவது உறுதியானதும், அவருக்கு ரஜினியும், விஜயும் வாழ்த்து அறிக்கை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ரஜினிக்கும், விஜய்க்கு அழைப்பு அனுப்பியது பாஜக. அவர்களும் டெல்லிக்குப் போகத் தயாரானார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால், இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால், தேமுதிக தவிர்த்த தமிழத்தின் அனைத்துக் கட்சிகளும் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நீங்கள் செல்வது சரியாக இருக்காது என்று ரஜினிக்கும், விஜய்கும் உடனிருந்தவர்கள் ஆலோசனை கூற, எடுத்த பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டனர் என  அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.