தெலுக் இந்தான், மே 26 – அம்னோவை குறை கூறியவர்களை எல்லாம் ஒட்டுமொத்த மலாய்காரர்களையும், இஸ்லாமையும் இழிவு படுத்திவிட்டதாகக் கூறி குற்றஞ்சாட்டுவதை அக்கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
“அம்னோ என்பது ஒரு கட்சி மட்டுமே இனம் அல்ல” என்று நேற்று இரவு தெலுக் இந்தானில் நடைபெற்ற கூட்டமொன்றில் அன்வார் இப்ராகிம் கூறினார்.
“அம்னோவில் பெரும்பாலும் மலாய்காரர்கள் பிரதிநிதிப்பது உண்மை தான். ஆனால் அதில் மலாய்காரர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். சபா, சரவாக் மாநிலங்களில் அம்னோ உறுப்பினர்களாக கிறிஸ்தவர்களும் உள்ளார்கள். அவர்கள் மலாய்காரர்களாக இல்லாவிட்டாலும் பூமிப்புத்ராக்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள தெலுக் இந்தான் இடைத்தேர்தலில், ஜசெக வேட்பாளராக களமிறங்கியுள்ள டயானா சோஃப்யா முகமட் டவுட் மீது இன்னும் நிறைய தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தப்படக்கூடும் என்றும் அன்வார் தெரிவித்தார்.