Home உலகம் சீனாவில் பாண்டா கரடியை பராமரிக்க சொகுசு காருடன் கூடிய சம்பளம்!

சீனாவில் பாண்டா கரடியை பராமரிக்க சொகுசு காருடன் கூடிய சம்பளம்!

575
0
SHARE
Ad

Panda bearபெய்ஜிங், மே 27 – சீனாவிலுள்ள விலங்குகள் காப்பகத்தில் இருக்கும் பாண்டா கரடியை பராமரிக்கவும், கவனித்துக் கொள்ளவும் 22 வயதுக்கு மேற்பட்ட தாதி தேவை என சீனாவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காப்பகத்தில் ஒரு கரடிக்கு ‘தாதி’யாக இருந்து பராமரிக்க 22 வயதுக்கு மேற்பட்ட நபர் வேலைக்கு தேவை என்றும், தனது பராமரிப்பில் உள்ள பாண்டா கரடியின் சுக-துக்கங்களில் பங்கேற்கக்கூடிய மனநிலையும், தகுதியும் படைத்தவராக அந்தப் பணியாளர் இருக்க வேண்டும் என்றும் அந்த காப்பகம் அறிவித்துள்ளது.

panda-bearஇதற்கான நேர்முகத் தேர்வு கடந்த சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சீன பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. 365 நாட்களும் பாண்டா கரடியுடன் இருந்து அதை கண்ணும் கருத்துமாக பராமரிப்பவருக்கு இலவச உணவு, ஒரு சொகுசு காருடன் ஆண்டு சம்பளமாக 2 லட்சம் யுவான் (மலேசிய ரிங்கிட்டிற்கு சுமார் 1,05,000) வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice