Home இந்தியா உ.பியில் சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து – 40 பலி!

உ.பியில் சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து – 40 பலி!

673
0
SHARE
Ad

train-accidentசாந்த்கபீர் நகர்(உ.பி.), மே 27 – உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர்- கோரக்தாம் நகர்களுக்கு இடையே ஓடும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில்,  சூரெப் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, அதே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்குரெயில் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜினும், 4 பொதுப்பெட்டிகளும் குளுகுளு வசதி கொண்ட 2 பெட்டிகளும் தடம்புரண்டன. இதில் அந்த 6 பெட்டிகளும் உருக்குலைந்தன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விரைவு ரெயில் என்ஜின் ஓட்டுநர் லட்சுமி நாராயணன் மற்றும் சரக்கு ரெயிலின் கார்டு ஆகியோர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 120-க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர். இதைதொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு  2 மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இருப்பினும்,  படுகாயமடைந்தவர்களில் மேலும் சிலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மொத்தம் 40 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைக்கும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 1 லட்சம் இழப்பீடும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்க ரயில்வே உத்தரவிட்டுள்ளது