Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் மிக பிரபலமான அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுத்தம்!

இந்தியாவின் மிக பிரபலமான அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுத்தம்!

676
0
SHARE
Ad

carபுதுடில்லி, மே 27 – இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் உத்தாபார் எனும் இடத்தில் உள்ள மிகப் பிரபலமான அம்பாசிடர் கார் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இந்த கார் உற்பத்தியை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல உத்திகள் தோல்வியில் முடிந்துள்ளதால் கடந்த மே 24 முதல் தயாரிப்பை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அம்பாசிடர் வகை கார் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்தியாவில் அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை உபயோகிக்கும் காராக இது செயல்பட்டு வந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் காலமாற்றத்தினாலும் வேகமான பொருளாதார வளர்ச்சியினாலும், பிஎம்டபள்யூ, பென்ஸ், ஃபோர்டு, ஆடி போன்ற வெளிநாட்டுக் கார்கள் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

#TamilSchoolmychoice

தற்போது விதவிதமான கார்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கரமிக்கத்துள்ள நிலலையில் மிகப் பழமையான அம்பாசிடர் காரின் உபயோகம் மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம் அரசாங்க கார் என்ற புனைப் பெயருடன் செல்லப் பிள்ளையாக இருந்த அம்பாசிடர் காரை பல மாநில அரசுகளும் தற்போது கைவிட்டு விட்டு சொகுசு கார்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றன.

இச்சூழ்நிலையினால் அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற நோக்கத்தினால் அதன் தயாரிப்பை கடந்த மே 24 முதல் நிறுத்துவதாக சிகே பிர்லா குரூப் கம்பெனி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.