Home இந்தியா சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வாழ்த்து!

சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி வாழ்த்து!

501
0
SHARE
Ad

chandrababu_naiduசென்னை, மே 28 – சீமாந்திரா சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி அவரது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “உங்களுடைய கடுமையான மற்றும் உண்மையான உழைப்பு உங்களை எப்போதும் மக்களின் இதயங்களில்  இடம்பிடிக்க செய்திருக்கிறது.

சீமாந்திரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எனது நண்பர் என்.டி.ஆருடன் பழகிய காலங்களில் இருந்து உங்களுடைய அரசியல் வளர்ச்சியை கவனித்திருக்கிறேன்.

#TamilSchoolmychoice

உங்களுடைய தலைமையில் சீமாந்திரா அமைதியான மற்றும் சிறப்பான  நிர்வாகத்தை பெறுமென என நம்புகிறேன்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.