Home அவசியம் படிக்க வேண்டியவை எண்ணெய், எரிவாயு வணிகத் துறைகளில் ஏ.கே.நாதனின் எவர்சென்டாய் நிறுவனம் தீவிர ஈடுபாடு!

எண்ணெய், எரிவாயு வணிகத் துறைகளில் ஏ.கே.நாதனின் எவர்சென்டாய் நிறுவனம் தீவிர ஈடுபாடு!

969
0
SHARE
Ad

sendaiகோலாலம்பூர், மே 28 – மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எவர்சென்டாய் நிறுவனம் ஏற்கெனவே உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் கட்டிட நிர்மாணிப்புத் துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது.

மலேசிய இந்தியப் பணக்காரர்களில் ஒருவரான டான்ஸ்ரீ ஏ.கே.நாதன் நிர்வாகத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்து வழிகாட்டும் எவர்சென்டாய் நிறுவனம் தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் குத்தகைக்கு விண்ணப்பித்த பணிகளிலிருந்து வருமானம் கிடைக்கப் பெறும் என்றும், எதிர்காலத்தில் எவர்சென்டாய் நிறுவனத்தின் வருமானத்தில் பாதியை எண்ணெய் எரிவாயு துறைகள் ஏற்படுத்தி தரும் என்றும் ஏ.கே.நாதன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மையில், 580 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான ஒரு குத்தகையை எவர்சென்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான எவர்சென்டாய் ஆப் சோ பெற்றுள்ளது. தற்போது எவர்சென்டாய் ஆப்சோ நிறுவனம் குத்தகைக்குப் பெற்றுள்ள திட்டப்பணிகளின் மதிப்பு ஏறத்தாழ 850 மில்லியன் அமெரிக்க டாலராகும் (2.73 பில்லியன் மலேசிய ரிங்கிட்).

அதேவேளையில், மலேசிய ரிங்கிட் 10 பில்லியன் முதல் 12 பில்லியன் வரையிலான மதிப்புடைய குத்தகைப் பணிகளுக்கு எவர்சென்டாய் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் கட்டிட நிர்மாணிப்பு பிரிவு விண்ணப்பித்துள்ளது.

எண்ணெய் எரிவாயுப் பிரிவின் பெரும்பாலான குத்தகைப் பணிகள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஏ.கே.நாதன் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.நாதனின் புதல்வரான நரேஷ் தற்போது எவர்சென்டாய் ஆப்சோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அதன் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். இதன் நிறுவனத்தின் தலைமையகம் துபாய் நகரில் அமைந்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள புதிய குத்தைகைப் பணிகளோடு சேர்த்து இதுவரை மலேசியா 1.68 பில்லியன் மதிப்புடைய குத்தகைப் பணிகளை தாங்கள் பெற்றுள்ளதாகவும் அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் சில குத்தகைப் பணிகளைப் பெறுவோம் என்றும் நாதன் தெரிவித்தார்.

இதன் காரணமாக எண்ணெய் எரிவாயு வணிக விரிவாக்கங்களில் எதிர்காலத்தில் எவர்சென்டாய் குழுமத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவிகிதம் இவற்றிலிருந்து பெறப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.