Home நாடு எண் “370” சிறப்பியல்புகள் என்ன? – கொழும்பு செல்லியல் வாசகர் கா.சேதுவின் விளக்கம்!

எண் “370” சிறப்பியல்புகள் என்ன? – கொழும்பு செல்லியல் வாசகர் கா.சேதுவின் விளக்கம்!

725
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 28 – இன்று செல்லியலில் நாம் வெளியிட்ட கட்டுரை “மலேசியாவை ஆட்டிவைத்த “370” – இனி காஷ்மீரையும், இந்தியாவையும் ஆட்டிவைக்கப் போகின்றது!” – வெளியிடப்பட்ட குறுகிய காலத்திலேயே பல வாசகர்களை கவர்ந்திருக்கின்றது என்பது நமது செல்லியலின் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் வாயிலான அகப்பக்கத்தின் வழி நமக்குத் தெரிய வந்துள்ளது.

அந்தக் கட்டுரையின் இறுதியில், இந்த ஆண்டில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் 370 என்ற எண்ணுக்கு ஏதாவது சிறப்பியல்புகள் உள்ளனவா என்பது குறித்து எண்கணித நிபுணர்கள் ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்ற முத்தாய்ப்புடன் அந்த கட்டுரை நிறைவடைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இலங்கை, கொழும்புவில் வசிக்கும் கா.சேது என்ற நமது செல்லியல் வாசகர் நமக்கு முகநூல் வாயிலாக ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அதில், அவரது பார்வையில் 370 எண் குறித்து சில கருத்துகள் தெரிவித்திருக்கின்றார். அந்த சுவாரசியக் கருத்துகளை அப்படியே கீழே தந்துள்ளோம்.

39758_1157323750804_2023136_n Sethu

கா.சேதுவின் விளக்கம்

“கட்டுரையில் கடைசி வரி: //அதனால்தான் கேட்கின்றோம் – எண் கணித நிபுணர்களே! இந்த 370 எண்ணுக்கு ஏதாவது சிறப்பம்சங்கள் இருக்கின்றதா?// நான் எண் கணித நிபுணன் அல்ல. ஆனாலும் அறிந்தவைகள் ஓரிரண்டு:

1. இது ஒரு தன்விருப்ப எண் (Narcisstic number) http://ta.wikipedia.org/s/1553

2. மூவிலக்க எண்களில் நான்கே தன்விருப்ப எண்கள் (153,370,371, 403) அவற்றில் ஒன்றாக வருவதுடன் ஈற்றிலக்கம் 0 ஆனதால் அடுத்து எண்ணான 371 உம் ஒரு தன்விருப்ப எண்ணாவது சிறப்பு.

3. 1970களில் IBM வெளியிட்ட IBM 370 பெருமுகக் கணிப்பொறி (main frame computer) மிகவும் பிரபலமானது.

370 எண்ணை LED, LCD போன்ற எண்ணிம திரைகளில் (digital displays like in calculators) இட்டு தலைகீழாகப் புரட்டிப் பார்த்தால் அது OLE எனத்தெரியும் – அது எசுப்பானிய மொழியில் ஒரு பாராட்டு வியப்பொலி. (இவ்வாறு எண்களை தலைகீழாக பார்க்கையில் ஆங்கில எழுத்துக்களாக வாசிக்கப்படக்கூடியவைகளை Calculator Spelling அல்லது Beghiols என்பர்)

370 எண்ணைப்பற்றிய மேற்குறிப்பிட்டவைகளை அக்காலங்களில் Scientific American சஞ்சிகையில் எழுதும் பிரபலங்களில் ஒருவரான மார்ட்டின் காட்னர் (Martin Gardner) என்பவர் தமக்கு சுட்டிக்காட்டியதாகவும் தாம் அதை அக்காலத்தில் 370 வகை கணினியை சந்தைப்படுத்துவதில் முனைப்புடன் இருந்த ஐபிஎம் நிறுவனத்தின் நிருவாகிகளுக்கும் பொறிஞர்களுக்கும் சொற்பொழிவு ஒன்றை ஆற்றச் சென்றிருந்த போது எடுத்துரைத்ததாகவும் பிரபல பகுத்தறிவாளர் ஜேம்ஸ் ரண்டி (James Randi) பதிந்துள்ளார் இக் கட்டுரையில்: http://www.randi.org/site/index.php/swift-blog/1578-a-wonderful-artifact.html

(பல நாடுகளுக்குச் சென்று மூடநம்பிக்கைகளையும் இயல்பு கடந்த நிகழ்ச்சி நம்பிக்கைகளையும் அலசி முறியடிப்பவர் இந்த பகுத்தறிவுச்சிங்கம் ஜேம்ஸ் ரண்டி!)”

-மேற்கண்டவாறு கா.சேது விளக்கம் தந்திருக்கின்றார்.