Home உலகம் 2016-ல் அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து முழுவதுமாக வெளியேறும் – ஒபாமா தகவல்

2016-ல் அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து முழுவதுமாக வெளியேறும் – ஒபாமா தகவல்

420
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், மே 29 – ஆப்கானிஸ்தானில் இருந்து 2016-ம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஆப்கானிஸ்தானுக்கு திடீர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஒபாமா, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும், தங்கள் நாட்டு வீரர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் ஒபாமா நேற்று முன்தினம் அளித்துள்ள பேட்டியில், “இந்த ஆண்டில் 9800 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பர். அமெரிக்க மக்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி நமது படைவீரர்கள் ஆப்கனில் தங்கியுள்ளனர். நாம் தொடங்கிய பணி நிறைவு பெரும் நிலைக்கு வந்துவிட்டது.”

#TamilSchoolmychoice

“தற்போது அமெரிக்காவின் 32 ஆயிரம் வீரர்கள் ஆப்கனில் உள்ளனர். இந்த ஆண்டில் அவர்கள் 9800 ஆக குறைக்கப்படுவர். வரும் 2015-ம் ஆண்டு  இறுதியில் அல்லது 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஆப்கனில் இருந்து முழுமையாக திரும்பப் பெறப்படும்” என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கனில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.