இந்த ஆட்டொமேஷன் அமைப்பு மூலமாக வீடுகளின் அனைத்து மின்சாதனப் பொருட்களையும் ஐஒஎஸ் சாதனங்கள் மூலமாக கட்டுப்படுத்த இயலும். ‘ஸ்மார்ட் ஹோம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழினுட்பத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருட்களான மின் விளக்குகள், வெப்பச் சமநிலை இயந்திரங்கள், பாதுகாப்பு அமைப்பு, கதவுகளுக்கான மின் பூட்டு அமைப்பு, தொலைகாட்சி ஆகிய அனைத்தையும் ஐபோன்கள் மூலமாகவே இயக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியும்.
இந்த நவீன வசதியானது ஒரு சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்களின் கருவிகளில் மட்டுமே மேம்படுத்தப்படும் என்றும், அந்த உற்பத்தியாளர்கள் பற்றிய விவரங்களை ஆப்பிள் நிறுவனமே முடிவும் செய்யும் என்றும் கூறப்படுகின்றது.
2018-ம் ஆண்டில், சுமார் 9 மில்லியன் தயாரிப்புகளை ஆப்பிள் ஐஒஎஸ் கருவிகளின் வாயிலாக கட்டுப்படுத்தப்படலாம் என பிசினஸ் இன்சைடர் பத்திரிகை ஆருடம் கூறியுள்ளது.
‘இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ (Internet Of Things) என்ற இந்த தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் முன்பே மேம்படுத்த தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.