Home கலை உலகம் லிங்கா படத்தில் ரஜினியுடன் லண்டன் நடிகை நடிக்கிறார்!

லிங்கா படத்தில் ரஜினியுடன் லண்டன் நடிகை நடிக்கிறார்!

681
0
SHARE
Ad

rajinikanth-1சென்னை, மே 29 – லிங்கா படத்தில் ரஜினியுடன் லண்டன் நடிகை நடிக்கிறார். இரட்டை வேடங்களில் ரஜினி நடிக்கும் புதிய படம் லிங்கா. கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு மைசூரில் நடக்கிறது. இரு மாறுபட்ட வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அணை கட்டும் பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் பிரிட்டன் நடிகை தேவைப்பட்டார்.

இந்த வேடத்தில் நடிக்க லாரன் ஜே இர்வின் தேர்வானார். லண்டன் நடிகையான இவர், புகழ் பெற்ற வெஸ்ட் எண்ட் ஆன்னி, ஆலிவர் போன்ற படங்களில் நடித்தவர்.

#TamilSchoolmychoice

rajiniசமீபத்தில் ரஜினியுடன் இவர் நடித்த காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்பட்டது. பின்னர் ரஜினியுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்ட லாரன், இயக்குனர் ரவிக்குமாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதில் ரஜினி டிப்டாப் உடையில் கழுத்தில் டை அணிந்து இளமையாக தோற்றம் அளிப்பது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.