Home கலை உலகம் கவர்ச்சி நடிகை சோனாவைத் தொடர்ந்து திரிஷாவும் உடல் உறுப்புகள் தானம்!

கவர்ச்சி நடிகை சோனாவைத் தொடர்ந்து திரிஷாவும் உடல் உறுப்புகள் தானம்!

1146
0
SHARE
Ad

tri3aசென்னை, மே 29 – கவர்ச்சி நடிகை சோனாவைத் தொடர்ந்து நடிகை திரிஷா உடல் உறுப்புகளை தானம் செய்தார். சமூக சேவை பணிகளில் ஏற்கனவே திரிஷா ஆர்வம் காட்டி வருகிறார். தனது பிறந்த நாளின் போது ரசிகர்களை மரக்கன்றுகள் நட வைத்தார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று புத்தாடை மற்றும் உணவு வழங்கினார். தெருவோரம் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து வளர்த்தார். அத்துடன் தெருநாய்களை பிடித்து வந்து குளிப்பாட்டி தத்து கொடுக்கவும் செய்தார்.

பிராணிகள் பாதுகாப்பு அமைப்பிலும் பொறுப்பு வகித்து செயல்பட்டு வருகிறார். தற்போது இதற்கெல்லாம் மேலாக தனது உடல் உறுப்புகளையே தானம் செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

இறந்த பிறகு எனது கண், இருதயம், கிட்னி, நுரையீரல், கல்லீரல், கணயம் போன்றவற்றை எடுத்து மற்றவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பத்திரம் எழுதி கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். உடல் உறுப்புகளை தானம் செய்த திரிஷாவை சக நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பாராட்டினர்.

இது போல் கவர்ச்சி நடிகை சோனாவும் உடல் உறுப்புகளை தானம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். வருகிற ஜூன் 1–ஆம் தேதி சோனாவின் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்.