Home உலகம் 62 போதைப் பொருள் பொட்டலங்களை விழுங்கிய விமானி கைது!

62 போதைப் பொருள் பொட்டலங்களை விழுங்கிய விமானி கைது!

918
0
SHARE
Ad

cocaine packetsடெக்சாஸ், மே 29 – கொழும்பியா நாட்டிலிருந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு ஒரு விமானத்தின் பயணிகளில் ஒருவராக வந்த விமானி ஒருவர் 62 கொக்கைன் என்ற போதைப் பொருள் பொட்டலங்களை விழுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டேன்லி ரஃபேல் ஹில் என்ற 49 வயது விமானி இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். வார இறுதியில் கொலம்பியா வந்த அவர் 62 போதைப் பொருள் பொட்டலங்களை விமானம் ஏறுவதற்கு முன்பாக விழுங்கியிருக்கின்றார்.

ஆனால், பயணத்தின் போது அதில் ஒரு பொட்டலம் பிரிந்து கொண்டதால் உடல் நலக் கோளாறுக்கு உள்ளாகிய ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காவல்துறையினர் அவரை பாதுகாத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அவர் மீது கொக்கையன் போதைப் பொருள் வைத்திருந்தது, விநியோகிக்க முற்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளது. 62 போதைப் பொருள் பொட்டலங்களை விழுங்குவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். இதன் பாதிப்புகளை அவருக்கு யாரும் முறையாக தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.