Home நாடு ராஜபக்சே அரசாங்கத்திற்கு மலேசியா துணை போவதா? – வேதமூர்த்தி கண்டனம்

ராஜபக்சே அரசாங்கத்திற்கு மலேசியா துணை போவதா? – வேதமூர்த்தி கண்டனம்

537
0
SHARE
Ad

waytha1கோலாலம்பூர், மே 29 – ஐநாவினால் அகதிகள் தகுதி வழங்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மூன்று தமிழர்களை நாடு கடத்திய அனைத்துலக மனித உரிமை ஆணையத்தை ஹிண்ட்ராப் சாடியது.

மூன்று அகதிகளை விடுதலைப் புலிகள் என கைது செய்யப்பட்டு அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பியதன் மூலம் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுடன் மலேசிய அரசாங்கம் ஒத்துழைத்துள்ளதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி குற்றம்சாட்டினார்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார். ராஜபக்சே போர் குற்றவாளியாகவும் கொலையாளியாகவும் உலகம் முழுவதிலும் கருதப்படுவதாகவும் வேதமூர்த்தி கூறினார்.

#TamilSchoolmychoice

ராஜபக்சே அரசாங்கத்தின் ராணுவம் இலங்கையில் பெரிய அளவில் தமிழர்களை கொன்று குவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே அகதிகள் தகுதியைக் கொண்டிருந்த மூன்று இலங்கைத் தமிழர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியதன் மூலம் ராஜபக்சேவுக்கு மலேசிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியிருப்பதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கை அகதிகளுக்கு தங்களது நியாயத்தை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் போலீஸ் படைத் தலைவர் விசாரணையாளராகவும் நீதிபதியாகவும் அரசாங்க நிர்வாகத்தின் முடிவை அமல்படுத்துபவராகவும் செயல்பட்டுள்ளது வேதனையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று வேதமூர்த்தி மேலும் சொன்னார்.