Home கலை உலகம் தமன்னாவுக்காக காத்திருக்கிறது படக் குழு!

தமன்னாவுக்காக காத்திருக்கிறது படக் குழு!

612
0
SHARE
Ad

tamannaசென்னை, மே 30 – படப்பிடிப்பை தள்ளி வைத்து தமன்னாவுக்காக பட குழு காத்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் படம் மகாபலி (தெலுங்கில் பாஹுபலி). அனுஷ்கா பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ராணா, பிரபாஸ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

சிறப்பான வேடமொன்றில் தமன்னா நடிக்கிறார். சமீபத்தில் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் இப்படத்திற்காக பிரமாண்ட போர்க்கள காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடித்தபோது பிரபாசுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். காயம் குணம் அடைய சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ராஜமவுலி, “பிரபாஸ் குணம் அடைந்து வருகிறார். விரைவில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்களுக்கு  தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது பற்றி பட நிறுவனம் தரப்பில் கூறும்போது, படத்தின் வேலையில் ராஜமவுலி வேலையாக இருக்கிறார். இசை அமைப்பாளர் கீரவாணி 2 பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

வேறொரு படப்பிடிப்பில் இருக்கும் தமன்னாவும் இப்பட படப்பிடிப்பிற்கு வரவேண்டி உள்ளது. அவருக்காக காத்திருக்கிறோம். அவர் வந்தவுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எனவே இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றனர் பட குழுவினர்.