Home இந்தியா அமைச்சர்களுக்கு மோடி போட்ட அதிரடி தடை!

அமைச்சர்களுக்கு மோடி போட்ட அதிரடி தடை!

436
0
SHARE
Ad

modiடெல்லி, மே 30 – மத்திய அமைச்சர்கள் யாரும் தங்களது நெருங்கிய உறவினர்களை, செயலாளர்களாகவோ, உதவியாளர்களாகவோ நியமிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடி தடை போட்டிருக்கிறார்.

இது குறித்து புதிதாக பதவி ஏற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள பிரதமர் மோடி அதில், “மத்திய அமைச்சர்கள் தங்களது உதவியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அதற்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தங்களது செயலர்கள் மற்றும் உதவியாளர்களை பொது தொகுப்பில் இருந்தே நியமிக்க வேண்டும். பொது மக்களை தொடர்பு கொள்வதற்காக செய்யும் செலவினங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய அரசில், மத்திய அமைச்சர்கள் யாரும் உதவியாளர்கள் நியமனம் தொடர்பான விதிகளை பின்பற்றவில்லை. பலர் தங்களது அலுவலகத்தில் உள்ள முக்கியப் பொறுப்புகளில் உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நியமனம் செய்தனர்.

முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், தனது மருமகன், தனது சகோதரியின் மருமகன் ஆகியோருக்கு முக்கியப் பதவிகளை அளித்தார். அதேசமயம், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத் மாதிரி வளர்ச்சி குறித்து நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வந்தார்.

அதாவது, குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை செயலர்களாகவோ அல்லது உதவியாளர்களாகவோ நியமிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், மத்திய அமைச்சர்களை மோடி தற்போது அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.