Home உலகம் இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுக்கு சவால் – ஒபாமா

இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுக்கு சவால் – ஒபாமா

455
0
SHARE
Ad

85552563WM018_OBAMA_HOLDS_Nவாஷிங்டன், மே 30 – ”இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்காவுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது  என, அமெரிக்க அதிபர்  பாரக் ஒபாமா பேசினார்.

அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக பதவி வகிக்கும் பாரக் ஒபாமா, நியூயார்க் மாகாணத்தின் வெஸ்ட் பாயின்ட் என்ற இடத்தில், ராணுவ தளத்தில் பேசியதாவது, “இந்த உலகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

இது, புதிய வாய்ப்புகளை அளித்தாலும், புதிய ஆபத்துகளையும் வழங்குகிறது. அரசுகளின் அதிகாரம், தனிப்பட்ட மனிதர்கள் கையில் மாறியதால், 2001, செப்டம்பர் 11 தாக்குதல்களை நாம் சந்தித்தோம் என்பதை, நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

#TamilSchoolmychoice

இப்போதும் நிலைமை மாறி விடவில்லை. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள் மீது, ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களால், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அது போல், சீனாவின் ராணுவ பலம் அதிகரிப்பு, அண்டை நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில், நடுத்தர மக்களின் பொருளாதார வளர்ச்சி, நம்முடன் போட்டி போடும் அளவுக்கு உள்ளது. அந்த நாடுகள் உலக அளவில், முக்கிய நாடுகளாக உருவெடுத்து வருகின்றன.

இந்த வளரும் நாடுகளில், ஜனநாயகம் இருந்த போதிலும், சந்தை பொருளாதார கொள்கைகளை அந்நாடுகள் பின்பற்றும் நிலையிலும், 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள், அனைவரையும் இணைக்கும் சமூக தொடர்பு இணையதளங்கள் பயன்பாடு போன்றவை இருந்த போதிலும், சமூகங்களுக்கு இடையேயான மோதல், கலகங்கள் போன்றவை, முந்தைய தலைமுறையை நினைவுபடுத்துகின்றன.

எனவே, இந்த தலைமுறையைச் சேர்ந்த உங்களுக்கு, இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உலகில் அமெரிக்கா முன்னிலை வகிக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு தேவையில்லை.

எவ்வாறு நாம் முன்னிலை வகிக்கப் போகிறோம் என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது. எனினும், உலகில் அதிக சுதந்திரம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற அறநெறிகள் நிலவ வேண்டும் என்பது மட்டுமின்றி, அவை தான் நம்மையும் பாதுகாப்பாக வைக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை என  அதிபர் ஒபாமா பேசினார்.