Home கலை உலகம் ஜி.வி.பிரகாஷுக்கு நயன்தாரா போட்ட உத்தரவு!

ஜி.வி.பிரகாஷுக்கு நயன்தாரா போட்ட உத்தரவு!

550
0
SHARE
Ad

nayantharaசென்னை, மே 30 – தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்சுக்கு பச்சை கொடி காட்டினார் நயன்தாரா. வெயில், ஆடுகளம் தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

பென்சில் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து திரிஷா இல்லன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிப்பதுடன் அவரே இசை அமைக்கிறார்.

புதுமுக இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். பட தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய சென்றபோது பிரபல நடிகைகளின் பெயர்களை தலைப்பாக பதிவு செய்ய வேண்டுமென்றால் அந்த நடிகைகளின் அனுமதி பெற்று வரவேண்டும் என்று கூறி பதிவு செய்ய தயாரிப்பாளர் சங்கத்தில் மறுத்துவிட்டனர்.

#TamilSchoolmychoice

three-nayan-இதையடுத்து நயன்தாராவிடம் இதுபற்றி தெரிவித்தார் ஜி.வி.பிரகாஷ். கதை கேட்டுவிட்டு சொல்வதாக நயன்தாரா உத்தரவு போட்டார். பிறகு இயக்குனர் நேரில் சென்று நயன்தாராவிடம் கதையை சொன்னார்.

அதை கேட்டுவிட்டு தன் பெயரை வைப்பதில் ஆட்சேபனை இல்லை என்று பச்சை கொடி காட்டியதுடன் மறுப்பில்லா கடிதமும் கொடுத்தார். விரைவில் திரிஷா பெயரை தலைப்பில் சேர்க்கவும் திரிஷாவை சந்தித்து அனுமதி கேட்டு பேச உள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.