Home இந்தியா மோடியைச் சந்திக்கிறார் ஜெயலலிதா!

மோடியைச் சந்திக்கிறார் ஜெயலலிதா!

513
0
SHARE
Ad

jayalalitha-modiடெல்லி, மே 30 – புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக,தமிழக முதல்வர் ஜெயலலிதா டில்லியில் சந்திக்கவிருக்கிறார்.

வரும் ஜூன் 3-ஆம் தேதி இந்த சந்திப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமராக மோடி பதவியேற்ற விழாவில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது தமிழகத்தின் சார்பாக கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அளிக்கவுள்ளார்.

#TamilSchoolmychoice

தமிழகம் தொடர்பாக மத்திய அரசிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு விவகாரங்கள் பற்றிய விவரங்கள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கும் மத்திய அரசின் உடனடிக் கவனம் தேவைப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மனுவில் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.