தெலுக் இந்தான், மே 30 – மேன்மை தங்கிய பேரா சுல்தான் ஷா காலமாகிவிட்ட போதிலும், தெலுக் இந்தான் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி, நாளை மே 31 ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அப்துல் கனி சாலே தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணி வேட்பாளரான கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ கியாங் மற்றும் ஜசெக வேட்பாளரான டையானா சோஃப்யா முகமட் டவுட் ஆகிய இருவரும் தங்களது பிரசாரங்களின் மூலம் வேட்பாளர்களை கவர்ந்து வருகின்றனர்.
அனைத்துக் கட்சிகளும் எந்தவொரு தரப்பிலும் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளையும் எழுப்பாமல் தேர்தல் விதிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார். இதனிடையே, அம்மாநிலத்தில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஆகவே, தெலுக் இந்தான் தேர்தல் மே 31 ம் தேதி, நாளை திட்டமிட்டபடியே நடைபெறும்.