Home உலகம் எட்வர்ட் ஸ்னோடெனுக்கு கருணை காட்ட முடியாது: அமெரிக்கா திட்டவட்டம்!

எட்வர்ட் ஸ்னோடெனுக்கு கருணை காட்ட முடியாது: அமெரிக்கா திட்டவட்டம்!

575
0
SHARE
Ad

edward-snowdenவாஷிங்டன், மே 31 – அமெரிக்காவின்  உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென், சமீபத்தில்  அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு கருணை காட்ட அமெரிக்கா தயாராக இல்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், “ஸ்னோடெனுக்கு எதிரான வழக்குகள் மிகவும் தீவிரமானவை. தேசிய பாதுகாப்பிற்கும், அமெரிக்க மக்கள், அதன் கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய குற்றங்களை அவர் புரிந்துள்ளார்.

ஆதலால், அவருக்கு கண்டிப்பாக அமெரிக்க அரசு கருணை காட்டாது. இதையும் மீறி அவர் கருணையை எதிர்பார்த்தால் அது குறித்த முடிவினை அமெரிக்க நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

#TamilSchoolmychoice

தீவிரவாதிகள் உள்பட எங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை அடையாளம் கண்டு ஒடுக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு, ஸ்னோடென் ரகசியத் தகவல்களை வெளியிட்டு பெரும் தீங்கை இழைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, “சட்டத்தை மீறி ஸ்னோடென் செயல்பட்டுள்ளார். நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அவர் நாடு திரும்ப வேண்டும். அவரை அழைத்து வர விமானத்தை அனுப்பவும் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

சிஐஏ’யின் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்த ஸ்னோடென், விக்கிலீக்ஸ் இணையதளம் வாயிலாக அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.