Home நாடு தெலுக் இந்தான் இடைத் தேர்தல்: – 66.5 % சதவீத வாக்குப் பதிவு

தெலுக் இந்தான் இடைத் தேர்தல்: – 66.5 % சதவீத வாக்குப் பதிவு

641
0
SHARE
Ad

teluk intan nominationதெலுக் இந்தான், மே 31 – இன்று நடைபெற்ற தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு மையங்கள் மாலை 5.00 மணிக்கு மூடப்பட்டபோது, 66.5 சதவீத வாக்காளர்கள் – 59,927 பேர் – வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இங்குள்ள சங்காட் ஜோங் சாலையிலுள்ள அப்துல் ரஹ்மான் தாலிப் இடைநிலைப் பள்ளியில் வாக்குகள் சரிபார்க்கப்பட்டு, இரவு 9.00 மணிக்கு அதிகாரபூர் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி ஜசெக 68 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வென்றுள்ளதாக ட்விட்டர் வழி அரசியல் புள்ளிகள் பரிமாறிக் கொண்டிருக்கும் குறுஞ்செய்திகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice