Home நாடு தெலுக் இந்தானை மீட்டதில் மகிழ்ச்சி – நஜிப்

தெலுக் இந்தானை மீட்டதில் மகிழ்ச்சி – நஜிப்

581
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், ஜூன் 2 – தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சீனப் பயணம் முடித்து மலேசிய திரும்பிய தனக்கு தெலுக் இந்தான் வெற்றி ஒரு இனிப்பான செய்தி என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முன்னணி வேட்பாளர் மா சியூ கியோங் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அது வெற்றி தான் என்றும், தெலுக் இந்தான் தொகுதியை எதிரணியிடமிருந்து மீட்டிருப்பது ஒரு நல்ல செய்தி என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டுகால நல்லுறவை குறிக்கும் வகையில் சீனாவிற்கு 6 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட நஜிப், நேற்று பெய்ஜிங்கில் இருந்து நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் மா சியூ கியாங் 238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் டயானா சோஃப்யா முகமட் டவுட் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.