Home உலகம் உலக மக்களின் புகைப்படங்களை அமெரிக்கா ரகசியமாக சேகரிக்கிறது: நியூயார்க் டைம்ஸ்

உலக மக்களின் புகைப்படங்களை அமெரிக்கா ரகசியமாக சேகரிக்கிறது: நியூயார்க் டைம்ஸ்

458
0
SHARE
Ad

NSAநியூயார்க், ஜூன் 3 – உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோரின் முகத்தோற்றப் படங்களை அமெரிக்க உளவுத்துறை ரகசியமாக சேகரித்து வருவதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் முன்னாள் உளவாளி ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி, அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “என்.எஸ்.ஏ. அமைப்பு, முன்பு தனது உளவு வேலைகளுக்காக செல்போன் வாயிலாக அனுப்பப்படும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள், பிறரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டது.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களின் முகத்தோற்றம், கைரேகை பதிவுகள் உள்ளிட்டவைகளை சேகரித்து வருகின்றது.”

#TamilSchoolmychoice

“கடந்த 4 ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ்சல், செல்பேசிகள் மூலம் அனுப்பப்படும் செய்திகள், சமூக வலை தளங்கள், காணொளிக் கட்சிகள் ஆகியவற்றில் இருந்து முகத்தோற்றப் படங்களை சேகரித்து வருகிறது. இந்த புதிய முறை மூலம், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பிற நாடுகளின் உளவாளிகளை அடையாளம் காண முடியும் என அமெரிக்கா கருதுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்.எஸ்.ஏ. செய்தித் தொடர்பாளர் வாணி எம் வின்ஸ் தெரிவிக்கையில், “ஒட்டுநர் உரிமம் கோரும் விண்ணப்பம், பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்களில் உள்ள புகைப்படங்களை சேகரிக்க என்.எஸ்.ஏ.வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் புகைப்படங்கள், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படங்களை என்.எஸ்.ஏ. சேகரிக்கிறதா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.