Home உலகம் சிரியாவில் அதிபர் தேர்தல் தொடங்கியது!

சிரியாவில் அதிபர் தேர்தல் தொடங்கியது!

520
0
SHARE
Ad

0,,17581103_303,00மாஸ்கஸ், ஜூன் 4 – சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடந்து வருகின்றது.

சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக லெபனான் உட்பட அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது.

வழக்கமாக அதிபர் ஆசாத் மட்டுமே போட்டியிடுவார். ஆனால், இந்த தடவை அவருக்கு எதிராக மெஹர் கஜ்ஜார், ஹசன் அல்–நூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆனால், ஆசாத் மட்டுமே மக்கள் அறிந்த வேட்பாளர் ஆக உள்ளார். 15.8 மில்லியன் வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலுக்காக அங்கு 9,600 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையே ஓட்டுப் பதிவை புறக்கணிக்கும்படி பொது மக்களிடம் முக்கிய எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இருந்தும் இந்த தேர்தலில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் 3– -வது தடவையாக மேலும் 7 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.