டமாஸ்கஸ், ஜுன் 5 – சிரியா அதிபர் தேர்தலில் பஷர் அல் ஆசாத் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. திட்டமிட்டபடி காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் எதிர்பாராத வகையில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தற்போதைய அதிபராக உள்ள பஷர் அல் ஆசாத், மொத்தம் பதிவான வாக்குகளில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட 2 பிரதான வேட்பாளர்களான ஹஸன் அல் நௌரி மற்றும் மஹெர் ஹஜ்ஜர் ஆகியோர் முறையே 4.3 மற்றும் 3.2 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இதன் மூலம் சிரியாவின் அதிபராக தனது பதவியை மூன்றாவது முறையாக பஷர் அல் ஆசாத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.