Home வணிகம்/தொழில் நுட்பம் இத்தாலியின் ரோம், மிலன் நகரங்களுக்கான விமான சேவையைத் துவக்கியது ஏர் இந்தியா!

இத்தாலியின் ரோம், மிலன் நகரங்களுக்கான விமான சேவையைத் துவக்கியது ஏர் இந்தியா!

511
0
SHARE
Ad

imagesநியூ டெல்லி, ஜூன் 7 – இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா, நேற்று இத்தாலியின் ரோம் மற்றும் மிலன் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கியது. இதன் மூலம் தென்-மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கான தடையற்ற விமான சேவை நிறைவேற்றப்பட்டது.

இது பற்றி ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
“ரோம் மற்றும் மிலன் நகரங்களுக்கு ‘போயிங் 787 ட்ரீம்லைனெர்’ (Boeing 787 Dreamliner) விமானம் மூலம் விமான சேவை தொடங்கப்படுகின்றது. பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு இரு பிரிவாக பிரிக்கப்படுகின்றன. 18 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும், 238 எகானமி கிளாஸ் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.”

“இந்த விமான சேவை புது டெல்லியில் இருந்து ரோமின் லியோனார்டோ டா வின்சி விமான நிலையம் மற்றும் இத்தாலியின் மால்பென்ச விமான நிலையம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விமான சேவை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் மட்டும் செயல் பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதன் மூலம் தென்-மத்திய ஐரோப்பாவில் வசிக்கும் இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.