Home நாடு மசீச சார்பில் 5 டான்ஸ்ரீ விருதுகள் –  ம.இ.காவுக்கு ஒன்றுகூட இல்லையா?

மசீச சார்பில் 5 டான்ஸ்ரீ விருதுகள் –  ம.இ.காவுக்கு ஒன்றுகூட இல்லையா?

706
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், ஜூன் 8 – நேற்று மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட விருதுகள் பட்டியலில் ம.இ.கா சார்பாக ஒருவருக்குக் கூட டான்ஸ்ரீ விருது வழங்கப்படாதது ம.இ.கா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும், ம.இ.கா சார்பாக ஒரு மூத்த தலைவருக்கோ அல்லது இந்திய சமுதாயத் தலைவருக்கோ டான்ஸ்ரீ விருது வழங்கப்படும்.

ஆனால் இந்த முறை ஒருவருக்குக்கூட டான்ஸ்ரீ விருது வழங்கப்படவில்லை. மாறாக, மசீசவைச் சேர்ந்த 5 தலைவர்களுக்கு இந்த முறை டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் மசீச தேசியத் தலைவர்கள் சுவா சோய் லெக் மற்றும் ஓங் தீ கியாட் ஆகிய இருவருக்கும் டான்ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளதோடு, முன்னாள் மசீச அமைச்சர்களான டத்தோஸ்ரீ இங் யென் யென் (முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர்), டத்தோஸ்ரீ கோங் சோ ஹா (முன்னாள் போக்குவரத்து அமைச்சர்), டத்தோஸ்ரீ சோர் சீ ஹியூங் (முன்னாள் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர்)  ஆகிய ஐவருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை  டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர சீன சமூகத்தைச் சேர்ந்த பல வணிகப் பிரமுகர்களுக்கும் டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, ம.இ.காவை விட சிறிய கட்சியான பிபிபி கட்சியின் சார்பாக டத்தோஸ்ரீ கேவியசுக்கும் இந்த முறை டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையிலும், கடந்த காலங்களில் அவர் வகித்த துணையமைச்சர் பதவியை வைத்தும், அவர் ஆற்றிய அரசியல் பணிகள் காரணமாகவும் கேவியசுக்கு டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டது முற்றிலும் பொருத்தமானதுதான்.

ஆனால், ம.இ.காவுக்கு இந்த முறை ஏன் வழங்கப்படவில்லை என்பதுதான் கேள்வி.

மாமன்னர் பிறந்த நாளில் ஆண்டுதோறும் இந்திய சமுதாயத்திற்கு கிடைத்து வரும் கௌரவமான டான்ஸ்ரீ விருது இந்த முறை கிடைக்காமல் போனது சமுதாயத்திற்கு நேர்ந்துள்ள மற்றொரு இழப்பு என்றால் அது மிகையில்லை.