Home அவசியம் படிக்க வேண்டியவை கருணாநிதி – ரஜினி சந்திப்பு: அழகிரியை அமைதியாக்கும் முயற்சி!

கருணாநிதி – ரஜினி சந்திப்பு: அழகிரியை அமைதியாக்கும் முயற்சி!

651
0
SHARE
Ad

rajini,karunanidhiசென்னை, ஜூன் 9 – நடிகர் ரஜினிகாந்த் நேற்று  தி.மு.க. தலைவர் கருணாநிதியை, அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார். இவர்கள் சந்திப்பின் பின்னணியில், கருணாநிதியின் ரகசிய திட்டம் இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது.

அதாவது, தி.மு.க.விலிருந்து நீக்கம் செய்யப்பட்ட, முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியிடம் பேசி, உள்கட்சி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி விரும்புகிறார்.

அதற்காக அழகிரியிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க, தன்னுடைய தூதராக ரஜினியை தேர்ந்தெடுத்திருக்கிறார் கருணாநிதி எனவும், அது குறித்து பேசுவதற்காகத்தான், தன் இல்லத்துக்கு ரஜினியை வரவழைத்தார் கருணாநிதி எனவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

சமீபத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் 91-வது பிறந்த நாளை, உற்சாகமாக கொண்டாடினார். அவருக்கு நேரிலும், தொலைபேசி, இணைய தளம், ‘டுவிட்டர்’, ‘பேஸ்புக்’ மூலமாக உலகம் முழுவதும் இருந்து, 15 லட்சம் பேர், கருணாநிதி நீண்டநாள் நலமுடன் வாழ வேண்டும்’ என, வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் ரஜினி, வெளியூரில், ‘லிங்கா’ படப்பிடிப்பில் இருந்ததால், இம்முறை கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல முடியவில்லை. இருப்பினும், கருணாநிதியிடம் தொலை பேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்தார். பதிலுக்கு, கருணாநிதியும் தன் நன்றியை தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், ரஜினி திடீரென, நேற்று காலை கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். கருணாநிதியின் இல்லத்தில், அரசியல் சம்பந்தப்பட்ட தலைவர்கள் சந்திப்பு நடைபெறும் போது, கட்சியின் முக்கிய தலைவர்கள் அங்கிருப்பது வழக்கம்.

ஆனால், நேற்று ரஜினியின் வருகை பற்றி கட்சியின் முக்கிய தலைவர்களுக்குகூட தெரிவிக்கவில்லை. கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த ரஜினியை, கருணாநிதியின் மகள் செல்வி, வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இந்த சந்திப்பின் பின்னணியில் கருணாநிதியின் ரகசிய திட்டம் இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது.