Home உலகம் கராச்சி அனைத்துலக விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குல் – 23 பேர் பலி!

கராச்சி அனைத்துலக விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குல் – 23 பேர் பலி!

719
0
SHARE
Ad

Karachi airport attacked by militantsகராச்சி, ஜூன் 9 – கராச்சி ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 15 – க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

Karachi airport attacked by militantsபாதுகாப்பு வீரர்களை போன்று உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் கொடூர தாக்குல் நடத்தினர். ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தின் பழைய முனையத்தை கைப்பற்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

Karachi airport attacked by militantsதீவிரவாதிகள் நடத்திய துப்பாக்க்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து கராச்சி விமான நிலையத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலையடுத்து கராச்சி சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பாகிஸ்தானில் 144-தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.