Home கலை உலகம் ரஜினி மீது தீபிகாபடுகோனே திடீர் கோபம்!

ரஜினி மீது தீபிகாபடுகோனே திடீர் கோபம்!

656
0
SHARE
Ad

deepika-padukoneசென்னை, ஜூன் 9 – ரஜினி மீது தீபிகாபடுகோனே கோபமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது. ரஜினி,தீபிகாபடுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான்.

மோஷன் கேப்சர் முறையில் சவுந்தர்யா ரஜினி இயக்கினார். இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் தீபிகாபடுகோனே பங்கேற்காததற்கு காரணம் அவரது கதாபாத்திரம் படத்தில் சரியாக காட்டப்படாததுதான் என்று பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி பாலிவுட் செய்திகளில் வெளிவந்துள்ள பரபரப்பு தகவல், “கோச்சடையான் படத்தில் தனது கதாபாத்திரம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று தீபிகாபடுகோன் எண்ணியதால்தான் அப்படத்தின் அறிமுக விழாவிற்கு வராமல் தவிர்த்துவிட்டார்.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக ரஜினி மீதும், சவுந்தர்யா மீதும் தீபிகாபடுகோனே கடும் கோபமாக இருக்கிறார் எனவும், மேலும் இவரது கோபம் அவர் திரையுலக வழ்க்கையில் பாதிப்பை தான் ஏற்படுத்தும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.