Home உலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டான் நாட்டு தூதர் நியமனம்!

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டான் நாட்டு தூதர் நியமனம்!

1332
0
SHARE
Ad

images (1)நியூயார்க், ஜூன் 9 – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டான் நாட்டு தூதர் பிரின்ஸ் ஜீட் ராட் ஜீட் அல்-ஹுசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், ஐ.நா. உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் அல்-ஹுசேனை புதிய தலைவராக நியமித்தார்.

புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அல்-ஹுசேன் (50), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் ஜோர்டான் நாட்டுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பினராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இதே பதவியை 2000 முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆறரை ஆண்டுகள் வகித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், 2007 முதல் 2010-ம் ஆண்டு வரை அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கான ஜோர்டான் நாட்டுத் தூதராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையராக, கடந்த 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம், 2012-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2014-ம் ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.