Home வணிகம்/தொழில் நுட்பம் ஒலி கோர்ப்பு செயலியான சாங்ஸாவை வாங்கும் முயற்சியில் கூகுள்! 

ஒலி கோர்ப்பு செயலியான சாங்ஸாவை வாங்கும் முயற்சியில் கூகுள்! 

558
0
SHARE
Ad

songza_feature-585x341ஜூன் 9 – கூகுள் நிறுவனம், வட அமெரிக்காவைச் சேர்ந்த இசை சேர்ப்பு மற்றும் ஒலி கோர்ப்பு செயலியான ‘சாங்ஸா’ (Songza)-வை வாங்க உள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

இந்த சாங்ஸா செயலியானது வட அமெரிக்காவின் இணைய பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது. பயனர்கள் மற்றும் கால நிலைகளுக்கு ஏற்ப பாடல்களை இந்த செயலியின் மூலம் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

சமீப காலங்களில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், டுவிட்டர் போன்றவை ஒலி மற்றும் இசை சேர்ப்பு துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டே கூகுள் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.  

கூகுள், சாங்ஸா செயலியை சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. கூகுள் ப்ளே ஸ்டோரில் பலதரப்பட்ட ஸ்ட்ரீமிங் செயலிகள் இருந்தாலும், சாங்ஸா செயலியின் தனித் தன்மையின் காரணமாக, கூகுள் அதற்கு முன்னுரிமை தருவதாகக் கூறப்படுகின்றது.